தகவல் தொழில் நுட்பப் பாதுகாப்புத் தணிக்கை

அரசுத் துறைகளின் முக்கியத் தகவல்களைக் கொண்ட இணையதளங்களை பாதிப்புகள் மற்றும் ஊடுருவல்களிலிருந்து பாதுகாத்திட தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு தணிக்கை ரூ.1.76 கோடி செலவில் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. CERT-IN அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அரசுத்துறைகளின் இணையதளங்கள் மற்றும் மென்பொருள்களைத் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புத் தணிக்கையினை மேற்கொண்டு வருகிறது.