மாண்புமிகு முதலமைச்சரின் மாணவர்களுக்கான மின்னாளுமை உயரிய விருது

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மின்னாளுமை ஆர்வலர்களிடையே மின்னாளுமை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு, மாணவர்களுக்கான “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மின்-ஆளுமைக்கான உயரிய விருதை” அறிவித்துள்ளது. 08.10.2018 அன்று சென்னையில் நடைபெற்ற “கனெக்ட் 2018” (CONNECT 2018) நிகழ்வின்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.