தமிழக அரசின் அரசாங்க துறைகளுக்கான மின் ஆளுமை விருது

தமிழக அரசு தனது மக்களுக்கான சேவைகளை குடிமக்களின் இருப்பிடத்திற்கே சென்று சேரும் படி திறமையாகவும் , நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் , வெளிப்படையாகவும் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கு தேவையான அரசாங்க சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் அரசே தனது சேவைகளை குடிமக்களின் இருப்பிடத்திற்கே சென்று சேரும்படி வழங்கி வருகிறது, இதன் தொடர்ச்சியாக இதனை ஊக்குவிக்கும் பொருட்டு, குடிமக்களுக்கு சிறப்பாக மின் ஆளுமை மூலம் சேவைகளை வழங்கி வரும் அரசு துறை நிறுவங்களுக்கு பரிசு தொகை மற்றும் விருது வழங்கி வருகிறது.

அரசு துறைகள் தாங்கள் வழங்கி வரும் சேவைகளை பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து விருதுக்காக விண்ணப்பிக்கலாம்

  • மின் ஆளுமை மூலம் மறு கட்டமைப்பில் சிறந்து விளங்கும் அரசு துறை

  • மொபைல் / குடிமகன் மைய சேவைகளுக்கான சிறந்த

    மின்-ஆளுமை பயன்பாடு.

  • மாவட்ட அளவிலான மின் ஆளுமை காண விருது

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் அரசு துறை நிறுவனங்களுக்கு வெற்றி கோப்பை வழங்கி கௌரிக்கப்படுகிறது