சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான
தமிழக அரசின் மின் ஆளுமை விருது

தமிழக அரசு தனது மக்களுக்கான சேவைகளை குடிமக்களின் இருப்பிடத்திற்கே சென்று சேரும் படி திறமையாகவும் , நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் , வெளிப்படையாகவும் வழங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் "மக்களுக்கான சேவைகளை ஏற்று நடத்த மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்கும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரின் சமூகப் பொறுப்புணர்வை மதித்து அங்கீகாரம் செய்யும் வகையில், ஒவ்வொரு பிரிவிலும் முதலில் வரும் மூன்று நிறுவனங்களுக்கு / தொழில் முனைவோருக்கு , ஒவ்வொரு ஆண்டும் பரிசு தொகையும் மற்றும் மின் ஆளுமை விருது கோப்பையும் வழங்கிவருகிறது, மேலும் அவர்களால் தயாரிக்கப்பட்ட மென்பொருள்களை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பின் வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களுடைய மென்பொருளை தமிழக அரசின் மின் ஆளுமை விருதிற்காக விண்ணப்பிக்கலாம்

  • பல்வேறு துறைகளில் சிறந்த மின்-ஆளுமை பயன்பாடு.

  • மொபைல் / குடிமகன் மைய சேவைகளுக்கான சிறந்த மின்-ஆளுமை பயன்பாடு.

  • சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான மின் ஆளுமை விருது.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் 2 மென்பொருளுக்கு பரிசு தொகையாக ரூ. 1,50,000 /- மற்றும் ரூ.1,00,000/- வழங்கப்பட்டுவருகிறது.