தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை

முன்னுரை

தமிழக அரசின் அனைத்து மின்னாளுமை முயற்சிகளையும் தலைமையேற்று செயல்படுத்திட, மின்னாளுமை ஆணையரகம் 2006-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தேசிய மின்னாளுமைத் திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA) தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975–இன்கீழ் பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட்டது.தொலைநோக்குப் பார்வை

நல்லாளுமையை நிறைவு செய்யும்பொருட்டு, தகவல் தொழில்நுட்பக் கருவிகளின் வாயிலாக, அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, திறன்களை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்குச் இணக்கமான வகையில் வெளிப்படைத்தன்மையுடன் திறன் மிகுந்த சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

குறிக்கோள்

தகவல் தொழில்நுட்பத்தின் கருவிகளைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, குறைந்த செலவிலும், அளவிடக்கூடிய நிர்வாகத் தீர்வுகளை வழங்குவதும் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான நம்பிக்கை இணையம் (Blockchain),செயற்கைநுண்ணறிவு (Artificial Intelligence), / இயந்திர கற்றல்(Machine Learning) பொருட்களின் இணையம் (IoT), ஆளில்லா குறுவிமானங்கள் (Drones), தரவுப்பகுப்பாய்வு (Data Analytics), மிகைநிகர்உண்மை / மெய்நிகர் உண்மை (Augmented Reality/Virtual Reality) ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி அரசின் சேவைகளைத் திறம்பட வழங்குவதே தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் குறிக்கோளாகும்.


நோக்கம்

 • தமிழக அரசின் முதன்மைத் தொழில்நுட்ப மற்றும் புதுமையான அணுகுமுறைகளை உருவாக்கும் அமைப்பாக விளங்குதல்,

 • தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசு நிறுவனத்தினையும் காகிதப் பயன்பாடற்ற, இடையூறுகளற்ற, வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் நேரடி தொடர்புகளற்ற நிறுவனங்களாக மாற்றுதல்.

 • அரசின் சேவைகளை விரைவாக வழங்குவதன் மூலம் அச்சேவைகளைப் பெறும் பயனாளிகளுக்கு அதன் எளிமைத்தன்மையை உணரச்செய்தல்.

 • மாநிலத்தில் மென் உட்கட்டமைப்பினை ஏற்படுத்தி,மாநில பொருளாதாரத்தின் போட்டித் தன்மையை ஊக்குவித்து,மாநிலத்தை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தயார்படுத்தும் ஊக்குவிப்பானாக செயல்படுதல்

 • அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்வதில் ஒத்துழைப்பு நல்குதல் மற்றும் உதவுதல்.

 • பல்வேறு அரசுத் துறைகளின் பொதுவான சேவைகளின்தேவையை கண்டறிந்து, குறைந்த செலவில் தரமான தீர்வுகளைவழங்குதல்,

 • தமிழ்நாடுமின்னாளுமை முகமையினைப் போன்ற ஒத்த நோக்கமுடையஅரசுத் துறைகள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), சர்வதேச அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து, பகிர்ந்து கொள்ளத்தக்க வகையிலான ஆளுமையை உருவாக்குதல்.

 • ஆளுமைதொடர்பான சிக்கல்களுக்கு புதுமையான மற்றும் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளைஅளித்திடும் வகையில், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் திறமையான தனிநபர்களை கொண்ட ஒரு துடிப்பான சூழலை உருவாக்குதல்.

 • நிர்வாகத்தில் செயல்திறனை மேம்படுத்த, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத்தில் அனைத்து நிலைகளிலும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல்.

 • மின்னாளுமை குறித்த பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துதல்.

 • தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சஞ்சிகைகள், பயிலரங்க நடவடிக்கைகள், செய்திமடல்கள் போன்றவற்றை வெளியிடுதல்.