தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு

அறிமுகம்

புவிசார் தகவல் அமைப்பு இடம்சார் அல்லது புவிசார் தரவுகளைக் கண்டறிந்து சேமிக்கவும், கையாளவும், பகுப்பாய்வு செய்யவும், நிர்வகிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். புவியியல் தகவல்களை ஒருங்கிணைத்தல், சேமித்தல், பகுப்பாய்தல், பகிர்தல் மற்றும் வெளிக்காட்டுதல் ஆகியவற்றை செய்யும் ஒரு தகவல் மேலாண்மை அமைப்பாகும்.

தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பில் தமிழ்நாடு மாநில இடம்சார் தரவு உட்கட்டமைப்பு (TNSSDI), www.tngis.tn.gov.in என்ற வலைதளத்தில் புவிசார் தகவல் அமைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன .இது தமிழகத்தில் புவிசார் தகவல்களை ஒருங்கே கொண்ட இணையதளமாக விளங்குகிறது.


இத்திட்டத்திற்காக இதுவரை 29 துறைகள் / நிறுவனங்கள் தங்களது அடுக்குகளைப் பகிர்ந்துள்ளன.

  • புவிசார் தகவல் அமைப்பு (TNGIS) உட்கட்டமைப்பில் 358 தமிழ்நாடு அடுக்குகளும் 68 ஹிலாரி
    அடுக்குகளும் பதிவேற்றப்பட்டுள்ளன.
  • 499 பயனர் அங்கீகாரத் தகவல்கள் அரசுத் துறைகளின் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • 4282-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்