மாநில மின் குறிக்கோள் குழு

மாநில மின் குறிக்கோள் குழு (SeMT)

மாநில மின் குறிக்கோள் குழு (SeMT), மாநில அரசுகளின் மின்னாளுமைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் தேசிய மின்னாளுமைத் திட்டத்தின் (NeGP) கீழ், திறன் மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. மாநில மின் குறிக்கோள் குழுவானது மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. SeMT ஆனது திட்ட மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, நிதி மேலாண்மை மற்றும் மாற்று மேலாண்மை ஆகிய பிரிவுகளின் ஆலோசகர்களைக் கொண்ட ஒரு முக்கிய அமைப்பாகும்.