மாநிலத்தில் குடியிருப்போரின் குடும்பத் தரவு தளம்

State Family Data Base

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், ஜனவரி 2019- இல் மேதகு தமிழக ஆளுநர் அவர்களின் உரையின் மீதான பதிலுரையின் போது மாநிலத்தில் குடியிருப்போரின் குடும்பத் தரவு தளம் (SFDB) உருவாக்கப்படும் என பதிலளித்து அறிவித்தார். மாநிலத்தில் குடியிருப்போரின் குடும்பத் தரவு தளம் (SFDB) தமிழ்நாட்டில் குடியிருப்போரின் தரவுகளின் ஒற்றை ஆதாரமாக விளங்கும். பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகளைத் தங்குதடையின்றித் துல்லியமாக அறிந்திட உதவும் SFDB மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பான முறையில் மின்னணுமயமாக்கப்பட்ட தரவு தளமாக இத்தரவு தளம்விளங்கும்.