வளர்ந்துவரும் தொழில் நுட்பத்திற்கான உயர்தனிச் சிறப்பு மையம் (CEET)

Centre of Excellence

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேதகு ஆளுநர் அவர்களின் உரைக்கு அளித்த பதிலுரையில் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்திற்கான உயர்தனிச் சிறப்புமையம் (CEET) தமிழ்நாடு மின்னாளுமை முகமையில் உருவாக்கப்படும் என அறிவித்தார்கள். இச்சிறப்பு மையமானது அரசுத் துறைகளில் மென்பொருள் உருவாக்கம் மற்றும் உயர்தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் அறிவு இடைவெளியை சமன்செய்யும் ஒரு பாலமாக நிறுவப்படும். தெரிந்தெடுக்கப்பட்ட அரசுத் துறைகளின் புதுமையான முயற்சிகளுக்கு உதவும் ஒரு வினையூக்கியாக (Catalyst) விளங்குகிறது. இந்த மையம் தொழில்நுட்பவியல் துறையில் உள்ள பிற பங்குதார்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக விளங்குகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த மையம் தொழிற்துறை, அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் தேவைகளை இணைக்கும் பாலமாக விளங்குகிறது.

மேலும் இந்த மையம் மூலமாக
 • அரசு துறைகள், முகமைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களுடன் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல்.

 • சர்வதேச அளவில் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிறந்த யுக்திகளையும் செயல்பாடுகளையும், தரப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்.

 • பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள அலுவலர்களின் திறன் வளர்த்தல் மற்றும் தனித்த நோக்கங்கள் நிறைவடைய பயிற்சி அளித்தல்.

 • இதுபோன்ற உயர் தொழில்நுட்பம் மற்றும் அதற்கும் மேலான வசதிகளை அளிக்கும் பிற நிறுவனங்களையும் தொடர்பு கொள்ளுதல்.

 • வளர்ச்சித்திட்டங்கள், பயிற்சிகள், மாநாடுகள், கருத்தரங்குகள், சிறப்பு விரிவுரைகள் மற்றும் இதர நிகழ்வுகளை நடத்துதல்.

 • புதுமையான யுக்திகளையுடைய திறமையாளர்களைக் கொண்டு வளர்ந்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் புதிய கருத்துகளை பெறுதல் மற்றும் புதுமையான திறமைகளை வளர்த்தல்.

 • ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும், பத்திரிக்கைகளாகவும் மற்றும் இதர ஆவண வடிவில் வழங்குதல்.

 • ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் செய்வதற்குத் தேவையான முன்மாதிரிகளைக் கொண்டு பல்வேறு புதுவித அம்சங்களுடன் உயிர்ப்பான கட்டமைப்புகளுடனும் ஒரு முன் மாதிரியாக செயல்படுதல் .

 • மறுபயன்பாட்டிற்குத் தேவையான கோட்பாடுகளை உருவாக்குதல், பிறத் துறைகளுக்கான சொத்துகளின் பயன்பாட்டை மையப்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல்.

Cloud Based Management System
CEET மூலம் பின்வரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

 • CT scans வழியாக உள் இரத்தக் கசிவினைக் கண்டறிதல்

 • செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி பயிர்களை தாக்கும் பூச்சிகளை அடையாளம் காணுதல், நோய் மற்றும் பயிரின் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றைக் கண்டறிதல்.

 • கணினி நோக்கு (Computer Vision) அடிப்படையிலான வருகைப் பதிவு முறை

 • நம்பிக்கை இணையத்தை பயன்படுத்துதல்.

 • நம்பிக்கை இணையம் மூலம் பதிவு ஆவணங்களைத் திருத்தம் செய்வதிலிருந்து தடுத்துப் பாதுகாத்தல்.

 • மாநிலத் திட்டக் குழுவின் (SPC) நிலையான வளர்ச்சி இலக்குகளைக் (SDG) கண்காணித்தல்.

 • மாநிலத்தில் குடியிருப்போரின் குடும்ப தரவுத் தளம் (State Family Database) உருவாக்குதல்.

 • IoT மூலம் கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகத்தைக் கண்காணித்தல்.

 • அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் இயந்திரப் பேசி (Chatbot) உருவாக்குதல்

 • முதுமலை புலிகள் காப்பகத்திற்கான நிகழ்நேரக் கண்காணிப்புத் தீர்வு.

Cloud Based Management System